ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேறினார்.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதித்ததாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது மற்றும் அவருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.
அந்தக் கருத்துக்காக நீதிமன்றில் மன்னிப்புக் கோருவதாக உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ள சத்தியக் கடதாசியில் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தனது அறிக்கையின் மூலம் நீதிபதிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஏதேனும் அவமானம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்திற்கு அவதூறான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்கப் போவதாக அவர் வாக்குமூலத்தில் உறுதியளித்துள்ளார்.