நாட்டில் மேலும் 04 கொவிட்-19 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மரணங்கள் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட ஒருவரும் 60 வயதுக்கு மேற்பட்ட மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, இலங்கையில் மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,679 ஆக உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று (26) இலங்கையில் புதிதாக 58 கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 669,639 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.