தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில், எவ்வித விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை பெற்றது.
ஆட்டநேர முடிவில், சாரெல் எர்வீ 12 ஓட்டங்களுடனும் டீன் எல்கர் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், தென்னாபிரிக்கா அணி 241 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
மன்செஸ்டர்- மைதானத்தில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 151 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரபாடா 36 ஓட்டங்களையும் கீகன் பீட்டர்சன் மற்றும் வெர்னெய்ன் ஆகியோர் தலா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் புரோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் ரொபின்சன் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 415 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதன் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, போக்ஸ் ஆட்டமிழக்காது 113 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், நோக்கியா 3 விக்கெட்டுகளையும் ரபாடா மற்றும் மஹாராஜ் 2 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி மற்றும் ஹர்மர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில், எவ்வித விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை பெற்றது.
இன்னமும் 10 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டத்தை தென்னாபிரிக்கா அணி இன்று தொடரவுள்ளது.