மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செயலிழந்திருந்த ரேடியோ தெரபி இயந்திரத்தின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பொறியியலாளர் ஒருவரினால் இந்த இயந்திரம் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இயந்திரத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கதிரியக்க சிகிச்சை என்பது புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சையின் ஒரு முறையாகும் என்பதுக் குறிப்பிடத்தக்கது.