கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலம்பேயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், மேல்மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்னவின் வீட்டுக்கு சேதம் விளைவித்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, தங்கொடுவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.