டீசலினை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெற்றோலிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 500 முதல் ஆயிரம் மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.