• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/31
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான “தாமரை கோபுரத்தின்” செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பல புதிய அனுபவங்களை வழங்க கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தாமரைக் கோபுரத் திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியுள்ள நிலையில், மீதித் தொகையை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக சீனாவிடம் பெறப்பட்ட கடன் தவணை 2024 ஆம் ஆண்டிற்குள் செலுத்தி முடிக்கப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே கடனாகப் பெறப்பட்ட சுமார் 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீளச் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இவ்வருடம் மார்ச் மாதம் திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.

மேலும் அதன் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்படுகிறது.

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைத்தது.

உலகிலுள்ள செல்வந்த நாடுகளில் இருப்பதைப் போன்ற பொழுதுபோக்கு மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லோட்டஸ் டவர் தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு சாகச விளையாட்டுகளான ஸ்கை டைவிங் (Sky diving ) மற்றும் பங்கி ஜம்பிங் (Bungee jumping) ஆகியவையும் இதில் அடங்கும்.

இதுவரை 80 சதவீதமான உள்நாட்டு முதலீட்டாளர்களும் 20 சதவீதமான வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தாமரை கோபுரத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டயலொக் டெலிகொம் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் என்பன தலா 200 மில்லியன் ரூபா முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

தாமரைக்கோபுரத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நுழைவுச் சீட்டைக் கொள்வனவு செய்து, அனைவரும் இதனைப் பார்வையிடவும் புதிய அனுபவங்களை பெறவும் முடியும்.

நுழைவுச் சீட்டொன்றின் விலை 500 ரூபா என்பதோடு விசேட நுழைவுச் சீட்டின் விலை 2,000 ரூபாவாகும். பார்வையிட வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கான நுழைவுச் சீட்டு 20 அமெரிக்க டொலர்களாகும்.

அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக QR தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

10.5 ஏக்கர் நிலப்பரப்பில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 58 முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதில் 22 பேர் ஒப்பந்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளனர். 15 பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தாமரைக்கோபுர செயற்பாடுகளை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம், பிரபலமான உணவகங்கள், பப் (Pub) மற்றும் நினைவுப்பரிசு அங்காடிகள் (souvenir shop) என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் தளம், அலுவலக வசதிகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் டிஜிட்டல் சினிமா அனுபவத்தைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மிகவேகமாக இயங்கக்கூடிய மூன்று மின் தூக்கிகள் தாமரைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த அனைத்து அனுபவங்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்த்தும் அனுபவித்தும் மகிழ முடியும் என்று கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம் – இவர் காயம்

Next Post

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை

Related Posts

சிறைச்சாலை வன்முறைகளை நிதானமாக கையாண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றோம் – சுந்தரலிங்கம் பிரதீப் !
இலங்கை

2026-08-08
இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!
இந்தியா

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!
ஈரான்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை

இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

மரண தண்டனையை நிறைவேற்ற எனது கையொப்பத்தை பயன்படுத்த மாட்டேன் - நீதிமன்றத்திற்கு அறிவித்தார் ரணில்

ஆட்சி கவிழ்ப்பிற்கு தயாராகும் விமல் தரப்பு?

டலஸ் அணியுடன் கூட்டணிக்கு தயாராகும் விமல் அணி?

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

0
இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

0
அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

0
மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

0
இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

2026-08-08
இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

2026-08-08
அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

2026-08-08
மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

2026-08-08
இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

2026-08-08

Recent News

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

2026-08-08
இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

2026-08-08
அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

2026-08-08
மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

2026-08-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.