மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில், 18பேர் உயிரிழந்துள்ளதோடு 23பேர் காயமடைந்துள்ளதாக, ஹெராத் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹமீதுல்லா மோடவாகல் தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் குசர்கா மசூதியில் இடம்பெற்ற தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
சமூக ஊடகங்களில் வெளியான படங்கள், மசூதி வளாகத்தைச் சுற்றி ரத்தக்கறை படிந்த உடல்கள் சிதறிக் கிடப்பதைக் காட்டியது.
இந்த தாக்குதல் ஹெராத்தின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் ரசூலி ஊடகங்களிடம் கூறுகையில்,
‘இமாம்ஸ முஜிப் ரஹ்மான் அன்சாரி மற்றும் அவரது சில காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மசூதியை நோக்கிச் செல்லும் வழியில் கொல்லப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் தனது கைகளை முத்தமிடும்போது தன்னைத்தானே வெடித்துக்கொண்டார்’
குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் கூறினார்.
முஜிப் ரஹ்மான் அன்சாரி, ஜூன் மாத இறுதியில் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அறிஞர்கள் மற்றும் பெரியவர்கள் அடங்கிய ஒரு பெரிய கூட்டத்தில் தலிபானைப் பாதுகாக்க கடுமையாகப் பேசினார் மற்றும் அதன் நிர்வாகத்திற்கு எதிராக நிற்கும் எவரையும் கண்டிப்பதாக தெரிவித்தார்.
ரஹிமுல்லா ஹக்கானி காபூலில் உள்ள தனது மதரஸாவில் தற்கொலைத் தாக்குதலில் இறந்த பிறகு, ஒரு மாதத்திற்குள் வெடிப்பில் கொல்லப்பட்ட இரண்டாவது தலிபான் சார்பு அறிஞர் அன்சாரி ஆவார்.
ஹக்கானி ஆயுதமேந்திய குழுவான ஐ.எஸ்.ஐ.எல்.க்கு எதிராக கோபமான பேச்சுக்களுக்கு பெயர் பெற்றவர். அந்த அமைப்பு பின்னர் அவரது மரணத்திற்கு பொறுப்பேற்றது.