ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் சிறப்புக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் உணர்வுள்ள பிரஜைகளை சிறந்த அறிவு மற்றும் திறமையுடன் வலுவூட்டும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அத்தியாவசியமான கல்விக்கூடம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் பஷில் ராஜபக்ச யோசனையில் இந்த பயிற்சி முகாம் என்ற திட்டம் ஆரம்பிக்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆரம்ப நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த , நாமல் ராஜபக்ச என பலரும் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.