இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்ல வாய்ப்பில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் காணப்பட்ட 20.1 விகித வளர்ச்சியிலிருந்து 13.5 விகிதமாக அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாடு வலுவான நிலையில் இருப்பதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதாரத்தை இரண்டு இலக்கு வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.