உலக உணவுத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பெருந்தோட்ட சமூகத்தினருக்கும் விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் நெருக்கடியை கருத்திற்கொண்டு ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரேலுக்கு அதிகளவான தொழிலாளர்கள் அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.