சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பான சட்டமூலம் நேற்றுமுன்தினம் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்தது.
எனினும் இதற்கான திருத்தங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சபாநாயகரிடம் விவாதம் நடத்துமாறு கோரியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று நடைபெறவிருந்த 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் வேறொரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.