1985ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் அதன் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) பிற்பகலில் ஸ்டெர்லிங் பவுண்ட் 0.64 சதவீதம் சரிந்து 1.145 பவுண்டாக இருந்தது இது 37 ஆண்டுகளில் காணப்படாத நிலை ஆகும்.
பிரித்தானிய பொருளாதாரத்திற்கான பலவீனமான பார்வை மற்றும் வலுவான டொலர் ஆகியவை ஸ்டெர்லிங் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இங்கிலாந்து வங்கி கூறியது.
உக்ரைனில் போர் தொடர்ந்ததால் இந்த ஆண்டு பிரித்தானியா மந்த நிலையை நோக்கி செல்வதை சிறிதும் தடுக்கமுடியாது என்று ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி எச்சரித்தார்.
இது ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி விலைகளில் ஏற்படும் தாக்கத்தால் பெருமளவில் ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
2022ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் பொருளாதாரம் சுருங்கும் மற்றும் 2023ஆம் ஆண்டு இறுதி வரை சுருங்கும் என்று இங்கிலாந்து வங்கி எதிர்பார்க்கிறது.