ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி, மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடன் இணைந்து போராடும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரச பயங்கரவாதத்தின் ஊடாக நாட்டின் மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரை நசுக்கும் கோழைத்தனமான முயற்சியை அரசாங்கம் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்தா நிகழ்வில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
37 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை கடுமையாக சாடிய சஜித் பிரேமதாச, அமைச்சர்களின் செலவுகளுக்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.