வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இந்த வருடத்தில் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர் என்பதோடு ஒரு இலட்சத்து இருபத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெளிநாடு சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 5 ஆயிரம் தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.