நமது வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்துகொள்ள தேசிய மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் என உட்;துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெற்ற அகில இந்திய அதிகாரப்பூர்வ மொழி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் மொழிகளும், ஹிந்தி மொழியும் நமது கலாச்சாரத்தின் உயிரோட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி மொழியும், உள்ளூர் மொழிகளும் இணைந்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை வேரோடு பிடுங்கி எறியும் நேரம் வந்துவிட்டது என்றும் உட்;துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.