தி.மு.க. முப்பெரும் விழா விருதுநகரில் இன்று மாலை நடைபெறவுள்ளது இதற்காக பட்டம்புதூர் அண்ணாநகரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கலைஞர் திடலில் மாலை 4 மணியளவில் தி.மு.க. முப்பெரும் விழா ஆரம்பிக்கவுள்ளதாக தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்று பேசுகிறார். தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்டவர் பேரறிஞர் அண்ணா- முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது.
பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை மோகனுக்கும், கலைஞர் விருது தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படுகிறது.
அவர்களுக்கான விருது, பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கி பேருரையாற்றுகிறார். மேலும் தி.மு.க.வின் அனைத்து நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பணமுடிப்பு மற்றும் சான்றிதழையும் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.