ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இரண்டு பெரிய எரிவாயு குழாய்களில் மூன்று மர்ம கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன.
நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 க்கு ஏற்பட்ட சேதத்திற்கான காரணம் தெளிவாக இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கசிவுக்கு நீர்மூழ்கிக் கப்பல் பயணமே காரணம் என நோர்ட் ஸ்ட்ரீம் 1இன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
சேதத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது உடனடியாக ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை பாதிக்காது, ஏனெனில் இரண்டு குழாய்களும் செயற்படவில்லை.
ஐரோப்பாவை அச்சுறுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா பயன்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் முன்பு குற்றம் சாட்டியது, ஆனால் ரஷ்யா இதை மறுக்கிறது.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் எரிவாயு உட்கட்டமைப்பை சரியாகப் பராமரிக்க தடுப்பதாக ரஷ்யா கூறுகிறது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த சம்பவம் குறித்து மிகவும் கவலையாக இருப்பதாகவும், வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்றும் கூறினார்.
நோர்ட் ஸ்ட்ரீம் 1 குழாய், இரண்டு இணையான கிளைகளைக் கொண்டுள்ளது. ரஷ்யா பராமரிப்புக்காக அதை மூடிய ஒகஸ்ட் முதல் எந்த வாயுவையும் கொண்டு செல்லவில்லை.
இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள ரஷ்ய கடற்கரையிலிருந்து வடகிழக்கு ஜேர்மனி வரை பால்டிக் கடலுக்கு அடியில் 1200 கி.மீ. வரை நீழுகின்றது.