வடக்கு ஈராக்கில் அசோஸ் பிராந்தியத்தில், துருக்கி படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் குர்திஸ் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
அசோஸ் பிராந்தியத்தில் சில இடங்களைக் குறிவைத்து எஃப்-16 போர் விமானங்கள் மூலம் 16 முறை தாக்குதல் நடத்தியதாக குர்திஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈராக்குக்குள் சுமார் 140 கி.மீ. தொலைவு நுழைந்து துருக்கி போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியின் மீது எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்துவதைத் தடுக்க, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அல்லது பிகேகே இராணுவம் குறிவைப்பதாக, துருக்கி 2019ஆம் ஆண்டு முதல் வடக்கு ஈராக்கில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் மாதம், ஆபரேஷன் க்ளா-லாக் தொடங்கப்பட்டது. இதில் தரை மற்றும் விமானப் படைகள் அடங்கும். இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அல்லது பிகேகே என்ற அமைப்பானது 1984ஆம் ஆண்டுமுதல் எல்லை தாண்டி துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரையிலான இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த அமைப்பை துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
தன்னாட்சி பெற்ற குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு ஈராக்கின் அசோஸ் பகுதியில்