எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருட்களை மாத்திரம் இன்று (செவ்வாய்க்கிழமை) விநியோகிக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னதாக அறிவித்தது.
இந்த நிலையிலேயே, எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எவ்வித தடையும் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்தோடு, தவறான செய்தி எச்சரிக்கைகள் மற்றும் அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
There will be no disruption to the fuel distribution process. Request the public not to panic by misleading news alerts & statements.
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 3, 2022