பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக போசாக்கின்மையால் வாடும் சிறார்களுக்காக, வேலணை பிரதேச முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர் உதவிக் கோரியுள்ளார்.
போசாக்கின்மை நிலை சிறார்களின் கல்வியை பெரிதும் பாதிப்படையச் செய்வதால் அதிலிருந்து சிறார்களை மீட்டெடுக்க உதவுமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சயானி பாலமுரளி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) தேவா திறந்தவெளி அரங்கில் வேலணை பிரதேச முன்பள்ளி சிறுவர் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, 7 முன்பள்ளிகளுக்கு போசாக்குணவு வழங்குவதற்கு இதுவரை எந்தவொரு வழிமுறையும் கிடைக்காததால், இதுகுறித்து பொதுமக்களும் தன்னார்வலர்களும் அதிக அக்கறை செலுத்தவேண்டும் என அவர் வேண்டுக்கோள் விடுத்தார்.