• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/10
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 0
A A
0
52
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நல்ல பொருளாதாரக் கொள்கையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,

தேசிய சபையை ஒரு தளமாகக் கொண்டு தேசிய கொள்கைக் கட்டமைப்புக் குறித்து கலந்துரையாட ஒன்றாக இணைவோம் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கிருமித் தொற்று நீக்கிய, திரவ மருந்து உற்பத்தி தொழிற்சாலையை இன்று கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

போட்டி மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரமொன்றை உருவாக்கும் தேசிய கொள்கையொன்றை உருவாக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

‘இன்று மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். தொழில்களை இழந்துள்ளனர். சிலர் ஒரு வேளை உணவின்றி பசியால் வாடுகிறார்கள்.

இதற்கு நாம் நீண்டகால தீர்வு காண வேண்டும். அந்த நிலைக்குத் திரும்பிச் சென்று தீர்வுகளைத் தேட முடியாது.

அதனால்தான் இன்று மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதற்காகத் தான் கொள்கைகள் உருவாக்க வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் நான் பிரதமராகவும் இருந்த போதே இந்த நிறுவனத்திற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்ன இருந்தார். நாங்கள் அனைவரும் இதை முன்னெடுத்துச் சென்றோம்.

இது நல்லாட்சியின் ஒரு பலனாகும். நாங்கள் அமைதியாக வேலை செய்தோம். பின்னர் அரசாங்கம் மாறியது.

புதிய அரசாங்கம் வந்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்படவில்லை.

பொதுவாக, ஒரு அரசாங்கம் மாறினால், ஏற்கனவே இருந்த அரசாங்கம் செய்த பணிகள் நிறுத்தப்படும்.

ஆனால் இது நிறுத்தப்படவில்லை. அதன் பின்னர் நான் ஜனாதிபதியாகி இன்று இதனைத் திறந்து வைக்கின்றேன்.

நாம் அனைவரும் ஒரே தேசியக் கொள்கையில் இருந்து செயற்பட வேண்டும்.

ஆனால் நாம் ஒரு தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும். அந்த தேசிய கொள்கையில் நாம் முன்னோக்கிச் சென்றால், நாம் ஒருபோதும் தோல்வியடைய மாட்டோம்.

நாம் அரசாங்கத்துக்கு அரசாங்கம் கொள்கைகளை மாற்றினோம். அமைச்சர்கள் மாறும் போதும் கொள்கைகள் மாற்றப்பட்டன. இவ்வாறு செயற்பட்டு நாம் எவ்வாறு முன்னேற முடியும்?

எமக்கு ஒரு நல்ல பொருளாதார கட்டமைப்பு இருக்க வேண்டும். ஒரு நல்ல சமூகக் கட்டமைப்பும் அரசியல் கட்டமைப்பும் இருக்க வேண்டும்.

நமது பொருளாதாரக் கட்டமைப்பானது, அரசியல் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பொறுத்தே அமைகின்றது. நிலையான அரசியல் முறைமையொன்றை ஏற்படுத்த முடியாவிட்டால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் இன்று இங்கு இருக்கின்றன.

எனவே, நாங்கள் ஒரு தேசிய கட்டமைப்பின்படி செயல்படுவோம் என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன்.
அப்போது அரசாங்கம் மாறினாலும் மாறாவிட்டாலும் பிரச்சினை இல்லை. அதனால்தான் அனைவரும் பங்கேற்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பல குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய சபை ஒன்றை உருவாக்கியுள்ளோம். எதிர்காலத்தில் நமது தேசியக் கொள்கைகள் குறித்து கலந்துரையாடவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் இதை ஒரு தளமாகப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கின்றேன்.

இத்திட்டத்தின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான புதிய வழி கிடைத்துள்ளது.

2017 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றது போன்று, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான கொள்கை தொடர்பில் உடன்பாட்டுக்கு வர முடியும் என்று நான் நம்புகிறேன். அதை நாம் நிறைவேற்றுவோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கில் சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எச்சரிக்கை!

Next Post

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் போராட்டம்

Related Posts

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”
இலங்கை

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

2026-04-26
இலங்கை

நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி

2026-04-26
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

அருச்சுனாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்னுக்கு விளக்கமறியல்!

2026-04-26
தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!
இலங்கை

தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

2026-04-26
மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!
இலங்கை

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

2026-04-26
நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,
இலங்கை

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

2026-04-26
Next Post
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் போராட்டம்

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

டொலர் இல்லை: 20 நாட்கள் கடலில் கச்சா எண்ணெய் கப்பல்

கிளிநொச்சி மாவட்டத்தின் பண்பாட்டு விழா!

கிளிநொச்சி மாவட்டத்தின் பண்பாட்டு விழா!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

0
பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

0

நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

அருச்சுனாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்னுக்கு விளக்கமறியல்!

0
டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.