கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் இந்தியர்களிடையே உரையாற்றிய அவர், கொரோனா காலத்தை மிகுந்த உறுதியுடனும் தொலைநோக்கு பார்வையுடனும் இந்தியா சமாளித்ததாக குறிபிட்டுள்ளார்.
இந்த காலகட்டத்தில் இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பில் பெரிய வளர்ச்சி காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் டிஜிட்டல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.