ஆரோன் ஃபின்ச் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் புதிய ஒருநாள் தலைவராக பெட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், கிரிக்கெட் அவுஸ்ரேலியாவால் அறிவிக்கப்பட்ட இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கம்மின்ஸுக்கு ஏற்கனவே டெஸ்ட் அணியின் பொறுப்பு இருப்பதால், ஒருநாள் அணியையும் அவர் பொறுப்புடன் திறம்பட வழிநடத்துவார் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்குப் பிறகு நவம்பர் 17ஆம் முதல் இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதன் பின்னர் ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.