ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி தொடர்பில் இன்னும் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கட்சி செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கென கொள்கையொன்று உள்ளது. அந்த கொள்கையின் அடிப்படையில் தங்களது பயணம் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதாரக் கொள்கையுடன் உடன்படக்கூடிய கட்சிகளுடன் இணைந்து செயற்படலாம் என குறிப்பிட்ட அவர், காலைவார முற்படும் கட்சிகளுடன் கூட்டு பயணத்துக்கு இனி தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டை நிர்வகிப்பதற்கு ஆதரவு வழங்கிவருவதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் தற்போதைய நிலைப்பாடுகளை ஆதரிப்பதாகவும் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் வேறுபாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் இணக்கம் காணப்பட்டால் இணைந்து பயணிப்பதில் சிக்கல் இருக்காது எனவும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.