எதிர்வரும் மாதம் 3ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக இரயில் இயக்க நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இம்முறை 14 இரயில் இயக்க நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைநிறுத்தங்களை, இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் (ஆர்.எம்.டி.) அறிவித்தது.
அதே நாட்களில் தொழிற்சங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் போக்குவரத்து நெட்வொர்க்கின் பிற பகுதிகளில் வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நவம்பர் 3, 5 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நெட்வொர்க் ரெயில் வேலைநிறுத்தங்களைத் திட்டமிடுவதாகவும், நவம்பர் 3 ஆம் திகதி லண்டன் அண்டர்கிரவுண்ட் மற்றும் ஓவர்கிரவுண்ட் நெட்வொர்க்குகளில் வேலைநிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஆர்.எம்.டி. கூறியுள்ளது.
பிரித்தானிய இரயில் துறை உறுப்பினர் அமைப்பான ஆர்.எம்.டி. மற்றும் இரயில் விநியோக குழு ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.