தெற்கு உக்ரைனில் உள்ள நீர்மின் நிலையத்தில் உள்ள அணையை தகர்க்க ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இது மிகப்பெரிய அளவிலான பேரழிவிற்கு வழிவகுக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
உக்ரைனிய தகவல்களின்படி, டினீப்பர் ஆற்றில் உள்ள ககோவ்கா அணை ரஷ்யப் படைகளால் தகர்க்கப்பட்டதாக தனது இரவு உரையில் கூறினார். அணை ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. ஆனால் அதை உக்ரைனிய படைகள் மூடியுள்ளது.
ககோவ்கா அணை மீது உக்ரைன் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா ஏற்கனவே குற்றம் சாட்டியது.
பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் பகுதியில் டினீப்பர் ஆற்றின் குறுக்கே எஞ்சியுள்ள சில வழித்தடங்களில் ஒன்றையும் இந்த அணை ரஷ்யாவிற்கு வழங்குகிறது.
ரஷ்யா இந்த வாரம் கெர்சனில் உள்ள தனது ப்ராக்ஸி அதிகாரிகளை வெளியேற்றத் தொடங்கியது, ஆனால் 50-60,000 குடிமக்களும் வெளியேறுவார்கள் என்றும் கூறியது. இது உக்ரைனிய அதிகாரிகளால் கட்டாய நாடுகடத்தல் எனக்கூறி கண்டனம் செய்யப்பட்டது.
உக்ரைனில் உள்ள ரஷ்யாவின் புதிய இராணுவத் தளபதி, ஜெனரல் செர்ஜி சுரோவிகின், உக்ரைனியப் படைகள் கெர்சன் நகரம் மற்றும் நீர்மின் அணை ஆகியவற்றில் தடைசெய்யப்பட்ட போர் முறைகளை திட்டமிடலாம் என்று குற்றம் சாட்டினார் மற்றும் குடிமக்களை வெளியேற்றுவதை நியாயப்படுத்தினார்.