பெண் தோழியை தலையை துண்டித்து கொலை செய்த விவகாரம் தொடர்பாக, ஜெம்மா மிட்செலுக்கு குறைந்தபட்சம் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவலில் அவர் கழித்த நாட்களுக்கு நானூற்று எழுபத்தைந்து நாட்கள் கழிக்கப்படும் என்றும் சட்டரீதியான கூடுதல் கட்டணம் பொருந்தும் என்றும் நீதிபதி ரிச்சர்ட் மார்க்ஸ் கே.சி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னதாக மீ குயென் சோங்கின் தலை துண்டிக்கப்பட்ட சடலம் டெவோனில் வீதியொன்றில் விடுமுறைக்கு வந்த நபர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. சோங்கின் தலை, துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்ட சில தினங்களுக்கு பிறகு உடலில் இருந்து 10 மீ தொலைவில் உள்ள மலைக்கு அடியில் உள்ள கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், 38 வயதான ஜெம்மா மிட்செல், 67 வயதான மீ குயென் சோங்கைக் கொன்று, நீல நிற சூட்கேஸில் உடலை அடைத்து, லண்டன் வீதிகளில் இரண்டு மணி நேரம் இழுத்துச் சென்று இருப்பது சிசிடிவி மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
மேலும் தேவாலயத்திற்கு சென்ற 67 வயதான மீ குயென் சோங்கை கொன்றுவிட்டு, தலையில்லாத சடலத்தை 200 மைல்களுக்கு அப்பால் தூக்கி எறிந்துவிட்டு, சொத்தை வரிசை செய்யும் முயற்சியில் போலி உயிலை உருவாக்க ஜெம்மா மிட்செல் முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர், அவரது குற்றங்கள் நிரூபணமானதையடுத்து மிட்செலுக்கு குறைந்தபட்சம் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.