வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 91ஆம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் இன்று (ஞாயிற்க்கிழமை) இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் பொது மக்கள், சிவில் சமூக அமைப்பினர், பெண்கள் அமைப்பினர் மற்றும் செயற்பாட்டாளர் என 100 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு ,கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.