தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையில் செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 66% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையில் பணவீக்கம் 69.8% ஆக பதிவாகியிருந்தது.
நாட்டின் உணவுப் பணவீக்கமும் செப்டம்பர் மாதத்தில் 85.6% ஆகக் குறைந்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் உணவுப் பணவீக்கம் 94.9% ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.