ஹம்பாந்தோட்டையில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கியதாக கொழும்பில் உள்ள இந்தோனேசியா குடியரசின் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை இந்தோனேசிய நட்புறவுச் சங்கத்துடன் (SLIFA) தூதரகம் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தகுதியுள்ள இலங்கையர்களுக்கு ஒற்றுமை மற்றும் நட்புறவின் வடிவமாக உலர் உணவுகளை விநியோகிக்கும் கூட்டு தொண்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கைக்கான இந்தோனேசியாவின் தூதுவர் டீவி குஸ்டினா டோபிங் (Dewi Gustina Tobing) மற்றும் இலங்கை இந்தோனேசிய நட்புறவு சங்கத்தின் (SLIFA) தலைவர் மர்லீனா லக்சனா ஆகியோரின் அனுசரணையில் இந்த தொண்டு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டையில் உள்ள கிராமங்களில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் ஆகிய நான்கு மத சமூகங்களைச் சேர்ந்த தேவையுடைய இலங்கையர்களுக்கு இந்தோனேசியாவின் தூதுவர் டீவி குஸ்டினா டோபிங் பல்வேறு வகையான உலர் உணவுகள் அடங்கிய 160 மளிகைப் பொதிகளை வழங்கினார்.