ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புக்களுடன் சேர்ந்து போரிட்டு ஈரானுக்குத் தப்பிச் சென்ற ஆப்கானிஸ்தான் சிறப்புப் படை வீரர்கள் இப்போது உக்ரைனில் போரிட ரஷ்ய இராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யர்கள் ஆயிரக்கணக்கான முன்னாள் உயரடுக்கு ஆப்கானிய கமாண்டோக்களை ‘வெளிநாட்டுப் படையணியாக’ ஈர்க்க விரும்புவதாகவும், அவர்களுக்கு மாதம் 1,500 டொலர்கள் சம்பளம் மற்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான புகலிடத்தை உறுதியளித்ததாகவும் மூன்று முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜெனரல்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் உள்ள டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட கமாண்டோக்கள் நாடுகடத்தப்படுவதாகவும், அவர்களுக்கு சண்டையிட விரும்பமில்லை என்ற போதிலும் அவர்களுக்கு வேறு வழியில்லை என்று ஜெனரல்களில் ஒருவரான அப்துல் ராஃப் அர்கண்டிவால் கூறினார்.
ஆட்சேர்ப்பு ரஷ்ய கூலிப்படையான வாக்னர் குழுவால் நடத்தப்படுகிறது என்று அர்கண்டிவால் மேலும் கூறினார்.
தலிபான்கள் பொறுப்பேற்பதற்கு முன் கடைசி ஆப்கானிய இராணுவத் தளபதி, ரஷ்யாவில் வசித்து வந்த மற்றும் மொழியைப் பேசும் முன்னாள் ஆப்கானிய சிறப்புப் படைத் தளபதியும் இந்த முயற்சிக்கு உதவுகிறார் என மற்றொரு ஜெனரல், ஹிபத்துல்லா அலிசாய் கூறினார்.
அமெரிக்க கடற்படை சீல் மற்றும் ராணுவ கிரீன் பெரட்களால் பயிற்சி பெற்ற ஆப்கானிய கமாண்டோக்கள் அமெரிக்க தந்திரோபாயங்கள் பற்றிய தகவல்களை இஸ்லாமிய அரசு குழுவான ஈரான் அல்லது ரஷ்யாவிற்கு வழங்கலாம் அல்லது அவர்களுக்காக போராடலாம் என்ற ஆபத்து குறித்து ஒகஸ்ட் மாதம் குடியரசு கட்சி காங்கிரஸின் அறிக்கை குறிப்பாக எச்சரித்தது.
இந்த நிலையில், அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.