“மலையக மக்களின் அடையாளம் கருதி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் போட்டியிடக்கூடிய சாத்தியம் உள்ளது.” என அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைபபாளரும், நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் மலையக கட்சிகளின் இணைவு என்பது இப்போதைய தலைமுறைக்கு புதிய விடயமாக இருந்தாலும், எனது அரசியல் பயணத்தில் இதற்கு முன்னர் ஒற்றுமைகளை பல தடவைகள் பார்த்துள்ளேன்.
மேலும் 1999 இல் மயில் சின்னத்தில்தான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்திய வம்வாவளி மக்கள் பேரணி என பெயரும் இடப்பட்டது. தற்போதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் கூட அந்த சின்னத்தில்தான் போட்டியிட்டுதான் அரசியல் அறிமுகம் பெற்றார் எனவும் தெரிவித்தார்.
இதற்கமைய ஒரு வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டு நடவடிக்கை இடம்பெறவேண்டுமே தவிர மாமன், மச்சான், தந்தை, மகன் என உறவு கொள்வதால் மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.