ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஜனாதிபதி எகிப்துக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போதே, அவர் அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது அவர் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து செயலாளர் நாயகத்திற்கு விளக்கினார்.
மேலும் இதன்போது, செயலாளர் நாயகம் 1978இல் தனது முதல் இலங்கை விஜயத்தின் நினைவுகளை நினைவு கூர்ந்தார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.