மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பதில் தேடாமல் மக்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்கின்றது என அனுர திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த நாடாளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் எழுச்சியை நசுக்க நடவடிக்கை எடுப்பதனாலேயே உலகில் இருந்து இலங்கை தனிமைப்படுத்தப்படுகின்றது என்றும் அனுர திஸாநாயக்க குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தின் உயர்வான காரணிகள் மீது மாத்திரமே இன்றைய கவனம் செலுத்தப்படுவதாகவும், இலங்கையின் புள்ளிவிபரங்கள் உண்மை நிலவரத்தை மறைக்கும் ஒன்று எனவும் தெரிவித்தார்.
இந்த புள்ளிவிபரங்கள் உண்மையான நிலைமையை பிரதிபலிக்கவில்லை எனவும், அரசாங்கத்திடம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.