சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன
இந்தோனேசியாவின் பாலியில் எதிர்வரும் 14ஆம் திகதி ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உட்பட அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில் இந்த மாநாட்டிற்கு இடையே சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளின் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.
தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் 3வது முறையாக சீன ஜனாதிபதியான பின்னர், ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்கவுள்ளார்.
இதன்போது இரு தலைவர்கள் இடையே தகவல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளிடையேயான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.