பிரித்தானியாவில் வசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் உள்ள ஈரானின் மூத்த இராஜதந்திரிக்கு வெளியுறவு அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட எதிர்க்கட்சி தொலைக்காட்சி நிலையமான ஈரான் இன்டர்நேஷனலில் பணிபுரியும் குறைந்தது இரண்டு ஊடகவியலாளர்கள், ‘உயிர்களுக்கு அச்சுறுத்தல்’ இருப்பதாக பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளவர்லி, ஊடகவியலாளர்களுக்கு எதிரான ‘எந்தவிதமான மிரட்டலையும்’ பொறுத்துக்கொள்ள முடியாது என கூறினார்.
எனினும், ஈரான் இந்த குற்றச்சாட்டை கேலிக்குரியது என நிராகரித்துள்ளது.
செப்டம்பரில் 22 வயதான மஹ்சா அமினியின் மரணம் தொடர்பாக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து ஈரானில் 40 ஊடகவியலாளர்ககளை ஆட்சியாளர்கள் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளவர்லி, ஆட்சி ‘கருத்துச் சுதந்திரத்தை நசுக்குகிறது மற்றும் ஈரானில் செயற்படும் ஊடகங்களை குறிவைக்கிறது’ என்று குற்றம் சாட்டினார்.