அவுஸ்ரேலியாவின் சிட்னியில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள விடுமுறை சொகுசு கப்பலில், சுமார் 800 பயணிகளுக்கு கொவிட் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தில் இருந்து புறப்பட்ட மெஜஸ்டிக் பிரின்சஸ் பயணக் கப்பல் சர்குலர் குவேயை வந்தடைந்தது.
கப்பல் வந்தபோது சுமார் 4,600 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கப்பலில் இருந்தனர். அதாவது ஐந்தில் ஒருவருக்கு கொவிட் இருந்தது. அனைத்து தொற்றுகளும் அறிகுறியற்றவை அல்லது லேசான அறிகுறிகளாக உள்ளன. கப்பல் விரைவில் மெல்போர்னுக்கு புறப்படும்.
12 நாட்கள் பயணத்தின் பாதியிலேயே அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் கண்டறியப்பட்டதாகவும் நேர்மறை சோதனை செய்த அனைத்து விருந்தினர்களுக்கும் தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடங்களை அணுகுவதன் மூலம் அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்க ஊழியர்கள் உதவுவார்கள் என்றும் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தொற்று 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரூபி பிரின்சஸ் பயணக் கப்பலில் கொவிட் தொற்று ஏற்பட்டதை நினைவூட்டுகிறது, அங்கு குறைந்தது 900பேர் நேர்மறை சோதனை செய்து 28பேர் இறந்தனர்.
அவுஸ்ரேலியா முழுவதும் கொவிட் தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தொற்றுப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸில், வெள்ளிக்கிழமை முதல் ஏழு நாட்களில் 19,800 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.