எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ள திட்டங்களின் கீழ் அனைவரும் அதிக வரி செலுத்த வேண்டும் என்று திறைசேரியின் தலைவர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
தனது வரி மற்றும் செலவுத் திட்டங்களை இலையுதிர்கால அறிக்கையின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் வழங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக பிபிசி ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு மக்களை அதிருப்தியடைய வைத்தாலும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை இது பாதுகாக்கும் என நம்பிக்கை அளித்தார்.
எரிசக்தி கட்டணங்ளுடன் போராடுபவர்களுக்கு மேலும் உதவி பற்றிய விபரங்களைத் தருவதாக அவர் உறுதிப்படுத்தினார். ஆனால் உதவிக்கு கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
சுமார் 35 பில்லியன் பவுண்டுகள் செலவினக் குறைப்புகளை அறிவிப்பதாகவும், 20 பில்லியன் பவுண்டுகளை வரியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கன்சர்வேடிவ்கள் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த குழப்பத்தை உருவாக்குவதாக தொழிற்கட்சி குற்றம் சாட்டியது.