கண்டி- தெல்தெனிய மகாபெரியதென்ன தமிழ் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த விழாவில், பாடசாலையில் சேவையாற்றிய முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் சாதனைகளை நிலை நாட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், அதிபர் எஸ்.சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன் பல கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த விழாவில் பிரதம அதிதிகளாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி, மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் பெரியதம்பி விக்னேஸ்வரன், தெல்தெனியா வலயக் கல்வி பணிப்பாளர் குமாரிஹாமி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.