பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆதரவு அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை டெல்லியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு நிதி ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் பாகிஸ்தானும், சீனாவும் ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்காக செலவிடப்படும் நிதியை, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளிடம் இருந்து பெற வழிமுறை உருவாக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.