நாடாளுமன்ற மழைக்கால குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 7ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 பணி நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் திகதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விடயங்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அறிய டிசம்பர் 6ஆம் திகதி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.