ஸ்கொட்லாந்தில் ஊதியம் தொடர்பான சர்ச்சையில், ஆசிரியர்கள் மேலும் 16 நாட்களுக்கு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக தொழிற்சங்கம் உறுதி செய்துள்ளது.
ஸ்கொட்லாந்தின் கல்வி நிறுவனம், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு உள்ளூர் சபைகளிலும் பிரிக்கப்படும் என்று கூறியது.
இரண்டு உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு 16 நாட்களிலும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள்.
உறுப்பினர்கள் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக, தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆண்ட்ரியா பிராட்லி கூறினார்.
வியாழக்கிழமை நடந்த வேலைநிறுத்தத்தால் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளும், பல உள்ளூர் சபைகளில் உள்ள முன்பாடசாலைகள் மூடப்பட்டன.