உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, வடகொரியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல்களை வட கொரியா அதன் சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டு சந்திக்கும் என அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, இன்று (சனிக்கிழமை) இந்த செய்தி வெளியாகியுள்ளது.
கிம்முக்கு அவர் அனுப்பிய செய்தியில், ‘அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் பிராந்தியம் மற்றும் உலகின் செழிப்பு ஆகியவற்றிற்காக சீனா இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஸி கூறியதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) தெரிவித்துள்ளது.
‘உலகம், காலம் மற்றும் வரலாறு முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றங்களை சந்தித்து வருகின்றன’ ஆகவே வடகொரியாவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ஸி கூறினார்.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வட கொரியா, ஏழாவது அணுகுண்டு சோதனையை உருவாக்குகிறது என்ற அச்சம் அதிகரித்துள்ளது