தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவியாகத்தான் இருப்பதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு குறித்த சட்டமூலம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும் இந்த சட்டமூலத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் காலாவதியாகும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து தமிழக அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும்.நிலையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த தடைச் சட்டத்துக்கு ஆளுநர் இதுவரை அங்கீகரிக்கவில்லை என சுட்டிக்காட்டிய கனிமொழி, ஒன்லைன் சூதாட்டத்தை பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.