தேசிய ரீதியில் சாதனை படைத்த வலி. வடக்கு மாகாஜனாக் கல்லூரி வீரங்கனைகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டடுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) தெல்லிப்பளை பிரதேசத்திற்கு பெருமை தேடித் தந்த,வீரங்கனைகளுக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் 20 வயதிற்கு உட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி தேசிய மட்டத்தில் வெற்றி வாகை சூடி சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவஸ்ரீ, உதவி பிரதேச செயலாளர் க.சரோஜினி, கல்லூரி அதிபர்கள், கல்விச்சமுகத்தினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.