வவுனியா நகரசபையின் புதிய செயலாளராக திருமதி விமலவேணி நிசங்க தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா நகரசபையின் முதல் பெண் செயலாளராக அவர் தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.
திருமதி விமலவேணி கிளி சென். தெரேசா மகளிர் மகாவித்தியாலயம் பழைய மாணவியும், பெரதெனியா பல்கலைக்கழக கலைமானி பட்டதாரி ஆவார்.
இவர் வவுனியா வடக்கு வலயக்கல்வி, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நகரசபை ஆகிய இடங்களில் நிர்வாக உத்தியோகத்தராகவும் , முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையில் 16வருடங்கள் சேவையாற்றியதுடன் அரச சேவையில் 28 வருடங்களாகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது