ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அந்தந்த நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மனிதக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் செயலாளர் ஈ.குஷான் என்பவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தமரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.