நாட்டில் புழங்கும் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவைக் குறைக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வரில் முதல் கட்டமாக டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, IDFC வங்கி ஆகிய நான்கு வங்கிகள் முதல் கட்டமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடுகின்றன. பாங்க் ஒஃப் பரோடா, யூனியன் பாங்க் ஒஃப் இந்தியா, HDFC, கோட்டக் மகிந்திரா ஆகிய வங்கிகள் இ-நாணயத்தை வெளியிட பின்னர் அனுமதிக்கப்படும்.
கிறிப்டோ பணத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் இடையிலும் தனிநபர் வணிகர் இடையிலும் இந்த டிஜிட்டல் பணத்தை பரிவர்த்தனை செய்யலாம்.