2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 11ஆம் நாள் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சுகளின் செலவீனங்கள் குறித்து இன்று விவாதம் இடம்பெறுகின்றது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமானது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
குழுநிலை விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை 13 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் இறுதி வாக்கெடுப்பு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.